இந்தியாவின் குடியரசு தினம் எதிர்வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்ச கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு, முக்கிய நகரங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, Chennai International Airport பகுதியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 30ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களிலும் கூடுதல் பாதுகாப்பாக ஏழு அடுக்கு பாதுகாப்பு நடைமுறை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், New Delhi உள்ளிட்ட பிரதான நகரங்களிலும் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள், அரசு கட்டடங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் சமீப காலங்களில் நடந்த சில பயங்கரவாத சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்காக இதுவரை இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் விழா பாதுகாப்பாக நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

