ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பண்டார் அப்பாஸ் நகரில் இன்று எட்டுமாடிக் கட்டடம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெடிப்பின் காரணமாக அந்த கட்டடத்தின் இரண்டு தளங்கள் முற்றிலும் சேதமடைந்ததாக அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் மீட்பு மற்றும் தீயணைப்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹார்மோஸ்கான் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை இயக்குநர் மெஹ்ரதாத் ஹசன்சாதே தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்த விபத்தில் உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை. ஈரான் அரசின் மேலதிக அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

