பொலிஸ் அதிகாரி ஆள்மாறாட்டம் செய்த பெண் ஒருவர், புறக்கோட்டை பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் விளையாட்டு சீருடை அணிந்திருந்ததாகவும், கைத்துப்பாக்கியைப் போன்று தோற்றமளிக்கும் மரத்தால் செய்யப்பட்ட ஆயுதம் ஒன்றை வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

