ஈரான் போர்: டிரம்ப் ஏற்காத புதிய முன்மொழிவு - ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்க படைகள் விலகல்

இரண்டு மாதங்களாக நீடித்து வரும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை குறித்த ஈரானின் புதிய முன்மொழிவு மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதேவேளையில், அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டால், ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாக ஈரான் சமிக்ஞை அளித்துள்ளது.