நைஜீரியாவின் குவாரா மற்றும் கத்சீனா மாகாணங்களில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பலர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் பல பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆயுதக்குழுக்கள் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொடூர சம்பவம் குறித்து போப் லியோ ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் பல சமூகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக அவர் கூறியுள்ளார். வன்முறை மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உறுதியுடன் செயல்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

