தனது உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி குறித்த அதிகாரி கடமை நிமித்தம் வெளியே சென்ற போது, பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், பின்னர் குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தொடர்பில் உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் OIC ஆக கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (28) ருவான்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
