அண்டார்டிகா ஆழ்கடலில் முதல் முறையாக கேமராவில் பதிவான சுறா – விஞ்ஞான உலகில் அதிர்ச்சி

அண்டார்டிகாவின் மிக ஆழமான, கடும் குளிர் நீர்பரப்பில் சுறா மீன் ஒன்று முதல் முறையாக கேமராவில் பதிவாகியுள்ளது. சூரிய ஒளியே எட்ட முடியாத அளவுக்கு ஆழத்தில், வெறிச்சோடிய கடலடியில் மெதுவாக நகர்ந்த அந்த பெரிய சுறா, ஆராய்ச்சியாளர்களுக்கு எதிர்பாராத காட்சியாக அமைந்துள்ளது.