அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவுகளை டிரம்பின் தனி மருத்துவர் சீன் பார்ப்பெல்லா வெளியிட்டார்.
சிடி ஸ்கேன், புற்றுநோய் பரிசோதனை, இதய பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை 22 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு மேற்கொண்டது. பரிசோதனை முடிவுகளின்படி, டிரம்ப் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும், முப்படைத் தளபதியாகப் பணியாற்ற முழு உடல்தகுதியுடன் இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போது டிரம்பின் உடல் எடை 104 கிலோவாக உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையின்போது இருந்த எடையைவிட தற்போது 6 கிலோ அதிகரித்துள்ளார். எனவே, உணவுக் கட்டுப்பாடு, எடைக் குறைப்பு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறு டிரம்பிற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

