அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் ஏரியா–51 குறித்து நீண்ட காலமாக நிலவி வரும் கேள்விகளுக்கு சமீபத்திய ப்ரோட்காஸ்ட் நிகழ்ச்சியில் விளக்கம் அளித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர், வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மை எனத் தான் நம்புவதாகக் கூறினாலும், அவர்களை தனிப்பட்ட முறையில் ஒருபோதும் சந்தித்ததில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் தான் கேட்ட முதல் கேள்விகளில் ஒன்று, வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான தகவல்களே எனவும் அவர் கூறினார். அதே நேரத்தில், ஏரியா–51 பகுதியில் இரகசிய நிலத்தடி பாதைகள் உள்ளதாகப் பரவி வரும் வதந்திகளையும் அவர் மறுத்தார்.
நெவாடாவில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளமான ஏரியா 51, பல ஆண்டுகளாக வேற்றுக்கிரகவாசிகள் விண்கலங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற சதி கோட்பாடுகளால் பேசுபொருளாக இருந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான உண்மை தகவல்களை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தாலும், அவர் எந்த நேர்காணலிலும் இதைப் பற்றி பகிரங்கமாக எதையும் தெரிவிக்கவில்லை.

