யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கு உற்சாகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வடக்கு மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
குறித்த நிகழ்வுக்காக சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரைக்காற்சட்டையுடன் நடைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
உற்சாகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, அங்கிருந்தவர்களுக்கு கைகாட்டிய வண்ணம் “நான் போய்ட்டு வருகிறேன்” என தமிழில் கூறிச் சென்றார்.

