கத்திக் குத்து கொலை முயற்சி: ஒருவர் படுகாயம், சந்தேக நபர் கைது

பெல்ஃபாஸ்ட் வடக்கில் உள்ள கின்னெய்ர்ட் அவென்யூ பகுதியில் திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் நடைபெற்ற கத்திக் கொலை முயற்சியில், 40 வயதுடைய ஒருவர் முகம், கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 30 வயதுடைய சோமாலிய நாட்டவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். வட அயர்லாந்து பொலிஸ் படை இதனை ஒரு முக்கிய சம்பவமாக அறிவித்து, நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.