நேபாள வெள்ளத்தில் 3 நாட்களாக இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுமி – பத்திரமாக உயிருடன் மீட்பு!

நேபாளத்தின் ராசுவா மாவட்டம் திமுரே பகுதியில், பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மண், பாறைகள், இடிபாடுகளுக்கு நடுவே 6 வயது சிறுமி 3 நாட்களாக சிக்குண்டிருந்த நிலையில், நேபாள ஆயுதப்படை போலீசார் போராடி உயிருடன் மீட்டனர்.