ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் இளவரசனாகவும், புத்தி கூர்மை, கல்வி ஞானம், கணிதத் திறன், வியாபாரம் மற்றும் தொடர்பாடலின் முக்கிய காரக கிரகமாகவும் புதன் பகவான் போற்றப்படுகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் புதனின் நிலை சுபத்துவமாக அமையும் போது, அவர்களுக்கு அபாரமான அறிவாற்றலும் தொழில் ரீதியான சாதனைகளும் எளிதில் கைகூடும். அந்த வகையில் தற்போது தனது ஆட்சி வீடான கன்னி ராசியில் சஞ்சரித்து வரும் புதன் பகவான், எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதி காலை 9:29 மணி அளவில் சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசிக்குள் பெயர்ச்சியாகிறார்.
ஜோதிட விதிகளின்படி புதனுக்கும் சுக்கிர பகவானுக்கும் இடையே நட்பு ரீதியான தொடர்பு நிலவுவதால், இந்த துலாம் புதன் பெயர்ச்சியானது ராசி மண்டலத்தில் பெரும் நேர்மறை அதிர்வுகளை உருவாக்கவுள்ளது.
இதன் தாக்கத்தால் தொழில் வளர்ச்சி, திடீர் பண வரவு மற்றும் குடும்ப உறவுகளில் சுபிட்சமான சூழல் உருவாகும் யோகம் சில குறிப்பிட்ட ராசிகளுக்குக் கிடைக்கவுள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்து நீண்ட நாட்களாக நிலவி வந்த மனக்கசப்புகளும் தேக்க நிலைகளும் முற்றிலுமாக விலகும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும், அதற்குத் தேவையான நிதி உதவிகளும் எதிர்பார்த்த இடங்களிலிருந்து தடையின்றி வந்து சேரும். பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்குரிய உரிய அங்கீகாரம் கிடைப்பதுடன், திறமைகளைப் பாராட்டிப் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் தேடிவரும் சூழல் உருவாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி பிள்ளைகள் வழியில் பெருமகிழ்ச்சியையும் நிம்மதியையும் அள்ளித் தரும். அத்தை வழி உறவுகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழல் ஏற்படும். புதிய வியாபாரம் மற்றும் வர்த்தக முயற்சிகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் வெற்றிகரமாகக் கைகூடும். உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் மற்றும் சிக்கல்கள் யாவும் விலகி சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்குப் புதிய கல்வி முறைகள், தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவுசார்ந்த விடயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் பன்மடங்கு அதிகரிக்கும். தொழிலில் இதற்கு முன்பு பின்னடைவைச் சந்தித்தவர்கள், தவறுகளைச் சரிசெய்து லாபப் பாதைக்குத் திரும்புவதற்கான தெளிவான வழிகளைக் கண்டறிவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பூர்வீக சொத்து வழக்குகள் மற்றும் சொத்துப் பிரச்சனைகளில் உங்களுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் பெண் பிள்ளைகளுடன் நிலவி வந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.
