ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் ஆரம்பமாகியுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிகள் தங்களது தொடக்க ஆட்டங்களிலேயே அபார வெற்றிகளைப் பதிவு செய்து வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளன.
45 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் நேற்றைய தினம் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இன்றைய தினம் நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 19-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியைப் பெற்றது.
இந்திய வீராங்கனை தீபிகா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பெனால்டி கோல்கள் உட்பட மொத்தம் 8 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதேவேளை, மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவின் குரூப் எப் சுற்றில் இந்தோனேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி 3-0 என்ற நேர் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றது. இதில் ஸ்ரீஜா அகுலா, தியா சித்தாலே மற்றும் யஷஸ்வினி கோர்படே ஆகியோர் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் டேபிள் டென்னிஸ் பிரிவிலும் இந்தோனேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி 3-0 என்ற நேர் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது. சத்யன் ஞானசேகரன், மானவ் தக்கர் மற்றும் மானுஷ் ஷா ஆகியோர் தங்களின் ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை வழங்கியுள்ளனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.