ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் ஒரே நாளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 45 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டிகள் நேற்றைய தினம் தொடங்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இன்றைய தினம் நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவின் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இளவேனில் வாலறிவன் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார்.
பரபரப்பாக இடம்பெற்ற இந்த இறுதிச் சுற்றில் பங்கேற்ற மற்றுமொரு இந்திய வீராங்கனையான சோனம் மாஸ்கர் ஏழாவது இடத்தைப் பெற்றார்.
முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர் மற்றும் விதார்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது.
இதன் மூலம் தனிநபர் மற்றும் அணிப் பிரிவு ஆகிய இரண்டிலும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றி இளவேனில் வாலறிவன் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.