இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை ரூ.434 ஆக இருந்த 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை ரூ.414 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஓட்டோ டீசல் லீற்றரின் விலையும் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.407 ஆக இருந்த ஓட்டோ டீசலின் புதிய விலை ரூ.382 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை மாற்றம் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.