இரவோடு இரவாய் ஈரானிலிருந்து வெளியேறிய நியூஸிலந்து தூதரக ஊழியர்கள்
New Zealand, ஈரானில் உள்ள தனது தூதரகத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.
New Zealand, ஈரானில் உள்ள தனது தூதரகத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரானில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாலும், அரசதந்திரிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத சூழல் உருவாகியுள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அரசதந்திரிகள் மற்றும் தூதரக ஊழியர்கள் உடனடியாக நியூஸிலந்துக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. Iran-இல் பணியாற்றி வந்த தூதரக ஊழியர்கள், இரவோடு இரவாய் வர்த்தக விமான சேவைகள் மூலம் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறியதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
தற்போது, நியூஸிலந்து தூதரகத்தின் செயல்பாடுகள் Ankara, Turkey-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும், அங்கு தற்போது வசித்து வரும் நியூஸிலந்து குடிமக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறும் அரசு வலியுறுத்தியுள்ளது.
(தலைமுறை)
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.