எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்றிரவு திடீரென தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்ற வாயிலில் வைத்து, ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது பிரபல ஊடக வலையமைப்பின் புகைப்படப் பிடிப்பாளர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சர்ச்சை சம்பவம் தொடர்பாக நலம் விசாரிப்பதற்காகவே இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலின் போது தற்போதைய சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த தீர்க்கமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.