இலங்கைக்கு அருகில் நிலவி வந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டை விட்டு விலகிச் செல்வதால், அதன் தாக்கம் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
குறிப்பிட்ட மாகாணங்களின் சில இடங்களில் சுமார் எழுபத்தைந்து மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பதிவாக வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.