நாட்டில் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் மிதமான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, அதிகாலை நேரங்களில் மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டமான சூழல் நிலவவும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.