வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (02) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனவே, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.