களுத்துறை, நாகொடையில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளரின் மனைவியும் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை சுமார் 07:40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், உணவகத்தின் முன்பாக உரிமையாளரையும் அவரது மனைவியையும் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி, இன்று காலை (11) நாகொடை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண், தொடங்கொடையை சேர்ந்த 52 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்தச் சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.