துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு எப்.இசட்.1073 என்ற எண் கொண்ட பிளைதுபாய் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் இருந்த ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, கேப்டனாகப் பணியாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தித் தாக்கினார்.
படுகாயமடைந்த நிலையிலும் துணிச்சலுடன் போராடிய மச்சார், உடனடியாக விமானி அறையின் கதவைத் திறந்து சக பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளே வர உதவினார்.
அவர்கள் உடனடியாகத் தலையிட்டுத் தாக்குதல் நடத்திய துணை விமானியைக் கயிற்றால் கட்டிப்போட்டுக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். விமானியின் இந்தத் துரிதமான நடவடிக்கையால் விமானத்தைத் தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டு, அதிலிருந்த 174 பயணிகள் மற்றும் பணியாளர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பயணிகளை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைப் பாராட்டி அவர் வெளியிட்ட பதிவில், அசாத்திய துணிச்சலுடன் செயல்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு தனது வணக்கங்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
கத்திக்குத்து காயங்களுக்கு மத்தியிலும் எதிர்த்துப் போராடி, நடுவானில் நிகழவிருந்த பெரும் பேரிடரைத் தடுத்து 174 உயிர்களைக் காப்பாற்றியுள்ள மச்சார் ஒரு உண்மையான நாயகன் என்று புகழாரம் சூட்டியுள்ள பிரதமர், அவர் விரைவில் முழுமையாகக் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.