ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பிலான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், அதேநேரம் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் விபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.