மகாராஷ்டிர மாநிலம், லத்தூரில் தோஷம் கழிப்பதாகக் கூறி 17 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதில் அச்சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லத்தூர் மாவட்டத்தின் தாக்ரே சவுக் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், குறித்த சிறுமியின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி, சடங்குகள் மூலம் அதனைத் தீர்த்து வைப்பதாக நம்ப வைத்துள்ளார்.
பின்னர் பரிகார சடங்குகள் செய்வதாகத் தெரிவித்து, அச்சிறுமியின் வீட்டிலேயே வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது எனவும், மீறிக் கூறினால் தோஷம் மீண்டும் வந்துவிடும் எனவும் கூறி சிறுமியை அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இதனால் சிறுமி இவ்விவகாரம் குறித்து எவரிடமும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.
தற்போது சிறுமி கர்ப்பமடைந்ததை அடுத்து விடயம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து புதிய குற்றவியல் சட்டம், போக்சோ சட்டம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மகாராஷ்டிர மாநில சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக விவேகானந்த சவுக் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.