×

பனிக்குளிரில் பிறந்த கன்று

அமெரிக்காவில் பனியில் நடுங்கிய புதிதாகப் பிறந்த கன்றை வீட்டிற்குள் அழைத்து வந்து பாதுகாத்த குடும்பத்தின் மனிதநேய செயல் இணையத்தை நெகிழ வைத்துள்ளது.

பனியில் நடுங்கிய புதிதாகப் பிறந்த கன்று

வீட்டின் வெளியே, பனியால் மூடப்பட்ட நிலையில் புதிதாகப் பிறந்த கன்றை கண்டார் மேசி சோரெல். பிறந்து சிறிது நேரமே ஆகியிருந்ததற்கான அறிகுறிகள் தெளிவாக இருந்தன.

வீட்டிற்குள் அழைத்து வந்த தாய் மனம்

குளிர் தாக்காமல் இருக்க கன்றை உடனே வீட்டிற்குள் அழைத்து வந்து துடைத்து சூடேற்றினர். சிறிது நேரத்தில், அது குழந்தைகளருகே சோஃபாவில் அமைதியாக உறங்கியது.

மீண்டும் தாயிடம் சேர்த்த நெகிழ்ச்சி

மறுநாள் காலை கன்றை பாதுகாப்பாக அதன் தாயிடம் திருப்பி ஒப்படைத்தனர். மனிதநேயமும் கருணையும் நிறைந்த இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.